1. இங்கே குத்துப்பட்டவன் அங்கே வாயை திறக்கிறான்.அவன் யார்? –தபால்
  2. ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான்? – செருப்பு
  3. தன்னை தானே சுற்றுவான் .ஆனால் ஊர் சுற்ற தெரியாது அவன் யார் ? – மின் விசிறி (Fan)
  4. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? – மிருதங்கம்
  5. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன? – வளையல்
  6. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன? – தேன் கூடு
  7. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன? – குடை
  8. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன? – குளிர்
  9. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?- கண்ணீர்
  10. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்? – உப்பு